1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 30 ஏப்ரல் 2017 (18:46 IST)

மாணவிகள் செல்போன் பயன்படுத்த தடை: பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு!

மாணவிகள் செல்போன் பயன்படுத்த தடை: பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு!

செல்போனால் பெண்கள் தவறான பாதைக்கு செல்வதாகவும், தவறான மனிதர்களை தொடர்பு கொள்வதாகவும், மேலும் பள்ளி செல்லும் மாணவிகள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என உத்தரபிரதேச பாஜக எம்எல்ஏ ஒருவர் பேசியுள்ளார்.


 
 
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் கல்லூரி ஒன்றில் பாஜக எம்எல்ஏ சஞ்சீவ் ராஜா, மேயர் சகுந்தலா பாரதி உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மேயர் சகுந்தலா பாரதி பள்ளி செல்லும் மாணவிகளுக்கு செல்போன் எதற்கு என கேள்வி எழுப்பினார்.
 
மேலும் அலிகாரில் உள்ள பெண்கள் செல்போனால் தவறான பாதைக்கு செல்கின்றனர். அதன் மூலம் தவறான மனிதர்களை தொடர்பு கொள்கிறார்கள் என்றார்.
 
அதனை தொடர்ந்து பேசிய எம்எல்ஏ சஞ்சீவ் ராஜா பள்ளிக்கு சென்று மீண்டும் வீடு திரும்பும் மாணவிகளுக்கு எதற்கு செல்போன் என்றார். அவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். அவர்களின் பெற்றோர்கள் தான் அதனை செய்ய முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டும் என்றார்.
 
மேலும் இளம்பெண்கள் முகத்தை மூடியவாறு நடமாடுவது செல்போன் பயன்படுத்துவதற்கு வசதியாக இருக்கும் என்பதற்காக தான் என்றார். இவரது இந்த சர்ச்சை பேச்சுக்கு பல கண்டன குரல்கள் எழுந்துள்ளன.