வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: செவ்வாய், 31 மே 2016 (15:24 IST)

அயோத்தியில் பாபர் மசூதி பிரச்சனைக்கு தீர்வு: மத தலைவர்கள் ஆலோசனை

அயோத்தியில் பாபர் மசூதி தொடர்பான சர்சைக்குரிய பிரச்சனைக்கு தீர்வு காண இந்து, முஸ்லீம் தலைவர்கள் ஒன்றாக கூடி ஆலோசனை செய்துள்ளனர்.


 

 
அயோத்தியில் அமைந்துள்ள பாபர் மசூதியை இடிக்க கோரி பல வருடங்களாக அங்குள்ள இந்து அமைப்பினரால் முஸ்லீம்-இந்துக்களுக்கு இடையே நிறைய பிரச்சனைகள் நடந்து வருகின்றது. இதற்கிடையில் நீதிமன்றத்திலும் இது தொடர்பாக வழக்கும் பல வருடங்களாக நடைப்பெற்று வருகிறது.  
 
இந்நிலையில் அனைத்திந்திய அகாரா பரிஷத் அமைப்பின் தலைவரான மகாந்த் நரேந்திர கிரி மற்றும் ஹாசிம் அன்சாரி ஆகியோர் சந்தித்து ஆலோசித்தனர். இந்த பேச்சிவார்த்தை அரை மணி நேரத்துக்கு மேலாக நடைப்பெற்றது.
 
பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களிடம் நரேந்திர கிரி கூறியதாவது:-
 
கலந்துரையாடல் மூலம் இந்த பிரச்சனைக்கு முடிந்த அளவு தீர்வு காண முயற்சிக்கிறோம். எடுக்கக்கூடிய முடிவு அமைதியான வழியிலும், அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் இருக்க வேண்டும். அதேபோல் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தினந்தோறும் விசாரிக்க வேண்டும், என்றார்.
 
மேலும் அன்சாரி கூறியதாவது:-
 
நாங்கள் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம். இந்த பிரச்சனைக்கு கண்டிப்பாக அமைதியான வழியிலே தீர்வு காண வேண்டும். அதுதான் இரு தரப்பு சமுதாயத்தினருக்கும் மகிழ்ச்சி, என்றார்.