வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 21 நவம்பர் 2023 (07:44 IST)

அயோத்தி ராமர்கோயில் அர்ச்சகர் பணிக்கு 3,000 பேர் விண்ணப்பம்.. கடும் போட்டி..!

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் விரைவில் திறக்கப்பட இருக்கும் நிலையில் அந்த கோவிலில் 20 பேர் அர்ச்சகர் பணிக்கு தேவைப்படுகிறது. இந்த நிலையில் இந்த பணிக்கு 3000 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
 அயோத்தியில் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் திறக்கப்படும் நிலையில் அர்ச்சகர் வேலைக்கு ஆட்கள் எடுக்கப்பட உள்ளனர். 20 பேர்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் 3000 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாகவும் இந்த விண்ணப்பத்திலிருந்து தகுதியுள்ள 20 பேர் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. 
 
ராமர் கோயில் அறக்கட்டளை சார்பில் அர்ச்சகர் பணிக்கான காலியிடங்கள் குறித்த விளம்பரம் சமீபத்தில் செய்தித்தாள்களில் வெளியானது. இந்த வேலைக்காக இதுவரை 3000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளதாகவும் இன்னும் அதிகமாக விண்ணப்பம் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இவர்களில் தேர்வு செய்யப்படும் 20 பேர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்கப்படும் என்றும் அதன் பிறகு அர்ச்சகர் ஆக நியமனம் செய்யப்படுவார்கள் என்றும்  அறக்கட்டளை பொருளாளர் தெரிவித்துள்ளார். 
 
Edited by Siva