Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

காதலை ஏற்காததால் கல்லூரி வளாகத்திற்குள்ளே மாணவிக்கு தீ வைத்து கொன்ற முன்னாள் மாணவர்


லெனின் அகத்தியநாடன்| Last Updated: வியாழன், 2 பிப்ரவரி 2017 (11:59 IST)
காதலை ஏற்காததால் வகுப்பறைக்குள் நுழைந்து கல்லூரி மாணவியை எரித்துக் கொன்று தானும் தீ வைத்துக் கொண்டதால் இருவரும் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

கேரள மாநிலம் கோழிக்கோடு விரிபாடு பகுதியைச் சேர்ந்த லெட்சுமி(21) என்பவர், கோட்டையத்தில் செயல்பட்டு வரும் மருத்துவப் படிப்புகளுக்கான கல்லூரியில் 3ஆவது ஆண்டு பிசியோதரபி படித்து வந்தார்.

அதேபோல், கொல்லம் அருகே நீண்ட கரையை சேர்ந்தவர் ஆதர்ஷ் (25). இந்த கல்லூரியின் முன்னாள் மாணவரான இவர் கல்லூரி அருகே பேன்சி கடை நடத்தி வந்தார். அந்த பேன்சி கடைக்கு மாணவி லெட்சுமி பொருட்கள் வாங்க சென்றபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

மேலும், ஆதர்ஷ் மாணவியை லெட்சுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து தனது காதலை லெட்சுமியிடம் கூறியுள்ளார். ஆனால், ஆதர்ஷின் காதலை லெட்சுமி நிராகரித்துள்ளார்.

இந்நிலையில், உணவு இடைவேளையின் போது கல்லூரிக்குள் நுழைந்த ஆதர்ஷ், லெட்சுமியின் வகுப்பறைக்குள் சென்று தன்னை காதலிக்கும் படி லெட்சுமியிடம் கெஞ்சியுள்ளார். ஆனால், அப்போதும் லெட்சுமி மறுத்துள்ளார்.

இதனையடுத்து ஆதர்ஷ், தான் மறைத்து வந்திருந்த பெட்ரோலை எடுத்து லெட்சுமி மீது அந்த இளைஞன் ஊற்றியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த லெட்சுமி அங்கிருந்து தப்பியுள்ளார். நூலகம் நோக்கி ஒடினார்.

விடாமல் துரத்திச் சென்ற அந்த இளைஞன் நூலகத்திற்குள் லெட்சமி மீது தீ வைத்து கொளுத்தியுள்ளான். அப்போது தன்னுடைய உடலிலும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டான். இதனால் பலத்த காயமடைந்த இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை காப்பாற்ற முயன்ற சில மாணவர்களுக்கும் காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து இருவரையும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். காதலை ஏற்காததால் தீ வைத்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :