1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 9 பிப்ரவரி 2023 (15:15 IST)

காங்கிரஸ் பெண் மேலவை உறுப்பினர் மீது தாக்குதல்! அதிர்ச்சி சம்பவம்

MLC Pradnya Satav
மாராட்டிய மேலவையில் பெண் உறுப்பினராக உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதன்யா சதாவை ஒரு மர்ம நபர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிர மா நிலத்தில் முதல்வர்  ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா   – பாஜக  கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

இம்மா நிலத்தைச் சேர்ந்த மறைந்த காங்கிரஸ் தலைவர் சதாவ்-ந் மனைவியும்  மேலவை காங்கியர்ஸ் உறுப்பினருமான பிரதன்யா சதாவ் இன்று ஹாங்கோலி பகுதியில் சென்றபோது, அவருக்குப் பின்னால் வந்த ஒரு மர்ம நபர் அவரை  தாக்கியுள்ளார்.

இந்தச் சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து பிரதன்யா தன் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில், ‘’இன்று நான் கஷ்பே தவான்டா கிராமத்திற்குச் சென்றபோது,  ஒரு அடையாளம் தெரியாத நபர் என்னை பின்னால் இருந்து முரட்டுத்தனமாகத் தாக்கினார்.  இது எனக்கு பெரியளவில் காயத்தை ஏற்படுத்தியுள்ளது. இது என் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.  முன்னாள் இருந்து சண்டையிடுங்கள்..கோழையாக இருக்க  வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.’’