Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஏடிஎம் கோளாறு: ரூ.100க்கு பதில் ரூ.500; 8 லட்ச ரூபாய் அம்பேல்!!


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 26 டிசம்பர் 2016 (17:23 IST)
ஹைதராபாத்தின் சம்ஷாகாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கொடாக் மகேந்திரா வங்கி ஏடிஎம்-ல் 100 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் அளிக்கப்பட்டுள்ளன. 

 
 
ரூ.100க்கு பதிலாக ரூ.500 கிடைப்பதை அறிந்த விமானப் பயணி ஒருவர் மற்றவர்களிடம் இதைக் கூற உடனே நிறைய பேர் அந்த ஏடிஎம்-ல் பணத்தை எடுத்துள்ளனர். 
 
இதனை அறிந்த வங்கி அதிகாரிகள் உடனடியாக விமான நிலையத்தில் உள்ள குறிப்பிட்ட ஏடிஎம் இயந்திரத்தின் சேவையை நிறுத்தினர். ஆனால், அதற்குள் ரூ.8 லட்சம் தொகையை வாடிக்கையாளர்கள் எடுத்துவிட்டனர். 
 
100 ரூபாய்க்கு உரிய இடத்தில் 500 ரூபாய் நிரப்பப்பட்டிருக்கிறது. இதனால் தான் இந்த தவறு நேர்ந்திருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :