1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (12:19 IST)

சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க கம்யூனிஸ்டு கட்சி முடிவு

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க மார்க்ஸிட்டு கம்யூனிஸ்டு கட்சி முடிவு செய்துள்ளது.


 

 
மேற்கு வங்க மாநில மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளின் கூட்டம் கொல்கத்தாவில் நடந்தது. இந்த கூட்டத்தில் மேற்கு வங்க சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் கூட்டணி அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
 
இந்த கூட்டத்துக்கு பிறகு அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சேர்ந்த பிமன் போஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முன்வந்துள்ளதால் அவர்களுடன் பேச்சு நடத்த தயாராக இருக்கிறோம்.
 
காங்கிரசுடன் கூட்டணி பேச்சு நடத்துவதில் எந்த தவறும் இல்லை. ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக அதே நோக்கத்துடன் செயல்படும் மற்றொரு கட்சியுடன் கூட்டணி பேச்சு நடத்துவதில் எந்த தவறும் இல்லை.
 
ஆனால் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பது குறித்த இறுதி முடிவை கம்யூனிஸ்டு கட்சிகளின் தேசிய தலைமைதான் எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.