1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 9 அக்டோபர் 2023 (12:48 IST)

5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதிகள்! – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Election Commission
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



வட மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களிலும், தென் மாநிலமான தெலுங்கானாவிலும் 5 ஆண்டுகால சட்டமன்ற ஆட்சி காலம் முடியும் நிலையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

தற்போது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளபடி, மிசோரத்தில் நவம்பர் 7ம் தேதியும், மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17ம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 23ம் தேதியும், தெலுங்கானாவில் நவம்பர் 30ம் தேதியும் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

சத்தீஸ்கரில் மட்டும் நவம்பர்7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த 5 மாநில தேர்தல்களின் முடிவுகளும் டிசம்பர் 3ம் தேதி வாக்கு எண்ணப்பட்டு அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K