புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (10:49 IST)

பாஜக வேட்பாளர் வாகனத்தில் வாக்குப் பெட்டி! – தேர்தல் அதிகாரிகள் பலே விளக்கம்!

அசாமில் நேற்று நடந்து முடிந்த தேர்தலின் வாக்குப்பெட்டி பாஜக வேட்பாளர் வாகனத்தில் கண்டறியப்பட்டது குறித்து தேர்தல் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தொடங்கி நடந்து வரும் நிலையில் நேற்று மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் அசாம் பாஜக வேட்பாளர் ஒருவரின் வாகனத்தில் இருந்து வாக்கு எந்திரம் கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பதிவு எந்திரத்தை எடுத்து சென்றபோது தேர்தல் வாகனம் பழுதாகி நின்று விட்டதாகவும், அதனால் அந்த வழியாக சென்ற வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்றதாகவும், ஆனால் அது பாஜக வேட்பாளர் வாகனம் என தெரியாது எனவும் விளக்கமளித்துள்ளனர்.