வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 15 மே 2024 (09:19 IST)

400 சீட்களை வென்றால் ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் பாபா கோவில்: அசாம் முதலமைச்சர்..!

வரும் பாராளுமன்ற தேர்தலில் 400 சீட்களுக்கு மேல் வென்று ஆட்சியைப் பிடித்தால் ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் பாபா கோயில் கட்டுவோம் என சர்ச்சைக்குரிய வகையில் அசாம் மாநில முதலமைச்சர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பாபர் மசூதி இருக்கும் இடத்தில் நீதிமன்ற உத்தரவை அடுத்து தற்போது ராமர் கோயில் கட்டப்பட்டிருக்கும் நிலையில் அடுத்ததாக ஞானபாபி மசூதி வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் அசாம் முதலமைச்சர் ஹிமந்த விசுவா சர்மா நேற்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய போது ’400 சீட்களை வென்று ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் பாபா விஸ்வநாத் கோவிலை கட்டுவோம் என்று தெரிவித்துள்ளார்

2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 300 சீட்களை வென்று அயோத்தி ராமர் கோவிலை கட்டினோம் என்றும் இந்த முறை 400 சீட்களை வென்று பாபா விசுவநாத் கோவிலை கட்டுவோம் என்றும் அதேபோல் மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமி கோவிலையும் கட்டுவோம் என்று அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva