திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (15:03 IST)

திடீர் திருப்பம்: காங். தலைவர் போட்டியிலிருந்து விலகுகிறாரா அசோக் கெலாட்?

ashok kelot
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுவதாக கூறப்பட்ட நிலையில் திடீரென அவர் போட்டியில் இருந்து விலக இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக இருந்த அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் அவர் முதல்வர் பதவியில் இருந்து விலக கூடும் என்பதால் புதிய முதல்வரை தேர்வு செய்ய காங்கிரஸ் தீவிர முயற்சி செய்து வருகிறது 
 
ஆனால் இதுவரை புதிய முதல்வரை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டு வருகிறது இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அசோக் போட்டியிலிருந்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ராஜஸ்தான் முதல்வர் ஆகவே தொடர வேண்டும் என்றும் எம்எல்ஏக்கள் வலியுறுத்தி வருகின்றனர்
 
இதனை அடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியில் போட்டியிடுவதில் இருந்து அசோக் மறு பரிசீலனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது