செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 20 அக்டோபர் 2024 (16:28 IST)

உதவி கேட்பது போல வந்து வழிப்பறி! தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை அலற வைத்த திருநங்கைகள்!

தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளை மறித்து வழிப்பறி செய்து வந்த திருநங்கைகள் கும்பலை போலீஸார் பிடித்துள்ளனர்.

 

 

தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை கிழக்கு மாவட்டங்களில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் செல்ல திருச்சி நோக்கி செல்பவர்களுக்கு பிரதான போக்குவரத்து பாதையாக உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் சமீபத்தில் சென்னையை சேர்ந்த நந்தக்குமார் என்ற தொழிலதிபர் பயணித்துக் கொண்டிருந்தபோது அவரது வாகனத்தை வழிமறித்த திருநங்கை ஒருவர் உதவி கேட்பது போல நடித்துள்ளார்.

 

பின்னர் மேலும் சில திருநங்கைகள் சேர்ந்து கொண்டு அவரை மிரட்டி அவரிடம் இருந்து வழிப்பறி செய்துள்ளனர். இதுதொடர்பாக அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் சுபஸ்ரீ, ரஃபியா, மயூரி, தேவயானி என்ற 4 திருநங்கைகளை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணம், 5 சவரன் தங்கச் சங்கிலி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தேசிய நெடுஞ்சாலையில் வேறு யாரிடமெல்லாம் இதுபோல இவர்கள் வழிப்பறி செய்தார்கள் என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Edit by Prasanth.K