1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 31 ஜனவரி 2015 (16:10 IST)

டெல்லி சட்டமன்றத் தேர்தல்: ஆம் ஆத்மி கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் கெஜ்ரிவால்

டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான ஆம் ஆத்மியின் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்.
70 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
 
  • விரைவான நீதிக்காக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
  •  
  • கல்விக்கும் சுகாதாரத்துக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
  •  
  • ஊழலை டெல்லியில் ஒழித்து கட்டுவோம்.
  •  
  • பெண்களின் பாதுகாப்புக்காக 10-15 லட்சம் சிசிடிவி கேமிராக்கள் அமைக்கப்படும்.
  •  
  • டெல்லியில் 500 புதிய பள்ளிகள் கட்டப்படும்.
  •  
  • டெல்லி முழுவதும் 2 லட்சம் கழிப்பறைகள் அமைக்கப்படும்.
  •  
  • டெல்லியை குளோபல் நகரமாக நாங்கள் மாற்றுவோம்.
  •  
  • ஜன்லோக்பால் மசோதா சட்டம் நிறைவேற்றப்படும்.
  •  
  • டெல்லியில் இலவச வைபை வசதி செய்யப்படும்.
  •  
  • 20 புதிய கல்லூரிகள் டெல்லியில் அமைக்கப்படும்.
  •  
  • 24 மணி நேரமும் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்படும்.
  •  
  • இளைஞர்களுக்கு உயர்படிப்புக்காக எளியமுறையில் கடனுதவி வழங்கப்படும்.
 
அறிக்கையை வெளியிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், மற்ற கட்சிகளின் தேர்தல் அறிக்கை வெறும் சம்பிரதாயத்திற்கானது. ஆனால் இந்த தேர்தல் அறிக்கை உங்களுக்கானது; புனிதமானது. பாரதீய ஜனதா அதன் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. பாரதீய ஜனதா ஏன் அதன் தேர்தல் அறிக்கையை வெளியிடத் தயங்குகிறது? இந்த தேர்தல் அறிக்கை, அடுத்த 4 மாதங்களில் டெல்லி மக்களுக்கான எங்களின் செயல்பாடுகள் பற்றிய குறிப்பாகும் என தெரிவித்துள்ளார்.