சிறையில் இருந்தே எம்,எல்.ஏக்களுக்கு உத்தரவிட்ட அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிர்ப்பு கூறி டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று ஆம் ஆத்மி தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
எனவே வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி டெல்லி அமைச்சர்கள், கட்சி எம்பிக்கல், எம்.எல்.ஏக்கல், கவுன்சிலர்கள், கட்சி பிரமுகர்களும் இப்போராட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.
இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடியே, நீர் ஆணையம் தொடர்புடைய உத்தரவு, அரசு மருத்துவமனைகள் மற்றும் மொகல்லா கிளினிக்குகள் குறித்த 2 வது உத்தரவை கெஜ்ரிவால் பிறப்பித்துள்ளார்.
இதை நிறைவேற்றுவோம் என ஆம் ஆத்மி அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சிறையில் இருந்தபடியே கட்சி எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவிட்டார். இதுகுரித்து அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது; கெஜ்ரிவால் சிறையில் உள்ளபோதும், அவரது குடும்பத்தினர்களான டெல்லியின் 2 கோடி மக்களும் எந்தவித் பாதிப்பையும் எதிர்கொள்ள கூடாது என கூறியதாக தெரிவித்தார்.
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதலமைச்சராக தொடர கூடாது என அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை இன்று நீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.