வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (12:47 IST)

பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் அருண் ஜேட்லி

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
 
அந்த ஆய்வறிக்கையில், நிதிப் பற்றாக்குறையை 4.1 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நடப்பு கணக்குப் பற்றாக்குறையை 2015-2016 ஆம் நிதியாண்டில் 1 சதவீதம் அளவுக்குக் குறைக்க முடியும் என்று கூறினார்.
 
2015-2016 ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்தை அடைய வாய்ப்புள்ளதாக அருண் ஜேட்லி தெரிவித்தார்.
 
சுரங்கம் மற்றும் அலைக்கற்றை ஏலம் மூலம் மத்திய அரசின் வருவாய் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.
 
நாளை ( பிப்ரவரி 28) மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.