1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 11 மே 2020 (08:31 IST)

ஆரோக்ய சேது செயலி மூலம் 300 புதிய பகுதிகள் கண்டுபிடிப்பு - நிதி ஆயோக் தலைவர் தகவல்

மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஆரோக்ய சேது என்ற செயலியின் மூலம் புதிதாக கொரோனா பரவும் 300 பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமிதாப் காரந்த் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மக்கள் கொரோனா தாக்கம் உள்ள பகுதிகள் எவையெவை என கண்டறிவதற்காகவும், மக்கள் அவற்றை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளவும் “ஆரோக்ய சேது” என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் ஆரோக்ய சேது செயலியை கண்டிப்பாக தங்கள் மொபைல்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அலுவலகம் புறப்படும் முன் ஆரோக்ய சேது செயலியில் சோதனையிட வேண்டுமென்றும், அதில் மிதமானது அல்லது அதிக அபாயம் என்று காட்டினால் அலுவலகம் வருவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த செயலியால் தற்போது வரை 300 புதிய வைரஸ் தொற்று பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நிதி ஆயோக் குழுவின் தலைவர் அமிதாப் காரந்த் தெரிவித்துள்ளார். அவர் ‘இந்த செயலியில் பதிவு செய்த தகவல்களின் அடிப்படையில் சுமார் 65 ஆயிரம் பேரின் வீடுகளுக்கு சுகாதார துறை ஊழியர்கள் நேரில்சென்று விசாரித்தனர். நாடு முழுவதும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்தவர்களில் 12,500 பேருக்கு வைரஸ் தொற்றுஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தற்போது 12 மொழிகளில் இயங்கி வரும் இந்த செயலி மேலும் 10 மொழிகளில் விரைவில்  வெளியிடப்படும்’ என அறிவித்துள்ளார்.