Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மனைவி சுனந்தா புஷ்கரை கொலை செய்தது சசிதரூரா? ரிபப்ளிக் டிவியின் பரபரப்பு ஆதாரங்கள்


sivalingam| Last Updated: செவ்வாய், 9 மே 2017 (08:04 IST)
முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் டெல்லி லீலா பேலஸ் ஓட்டலில் கடந்த 2014ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். முதலில் தற்கொலை என்று இந்த வழக்கை முடித்த டெல்லி போலீசார் பின்னர் கொலை வழக்காக மாற்றி கொலையாளியை தேடி வருகின்றனர்.


 


சுனந்தா புஷ்கரின் கொலைக்கு சசிதரூர் காரணமாக இருக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் சந்தேகத்தை கிளப்பிக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி, இந்த கொலைக்கு சசிதரூரே காரணம் என்ற ஆதாரத்தை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த டிவி தொடங்கப்பட்டு மூன்றே மூன்று நாள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் முதல் நாள் லாலு பிரசாத் யாதவ், இரண்டாவது நாள் அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோர்களை தொடர்ந்து இன்று சசிதரூர் பிரச்சனையை கிளப்பியுள்ளது.

ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ள சில ஆடியோ டேப்பில், "சுனந்தா உயிரிழந்தது, சசிக்கு முன்பே தெரியும் என்றும் சுனந்தா 307-வது அறையில் கொல்லப்பட்டு பின் 345-வது அறைக்கு மாற்றப்பட்டது உள்பட பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை விசாரணை செய்து வரும் போலீசாருக்கு இந்த டேப் பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :