1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 17 ஜூன் 2018 (18:17 IST)

சாலையில் குப்பை போட்ட நபரை திட்டித் தீர்த்த அனுஷ்கா ஷர்மா

சாலையில் குப்பை போட்ட நபரை அனுஷ்கா ஷர்மா திட்டித் தீர்க்கும் வீடியோவை விராத்கோலி வெளியிட்டுள்ளார்.
விராத் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவும் மும்பையில் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மற்றொரு காரிலிருந்த நபர், கண்ணாடி வழியாக பிளாஸ்டிக் குப்பையை சாலையில் வீசினார். இதனைக்கண்ட அனுஷ்கா ஷர்மா அந்த நபரை குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடுமாறு கூறினார். 
 
இதனை அனுஷ்கா ஷர்மாவிற்கு அருகிலிருந்த கோலி படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டார். மேலும் தனது மனைவியின் சமூக உணர்வை கோலி பாராட்டினார். இந்த மாதிரி குப்பை போடும் நபர்களை, அனைவரும் இப்படி படமெடுத்து பரப்பினால் தான் இது போல் தவறு நடக்காமல் தடுக்க முடியும் என கோலி தெரிவித்தார். இந்த வீடியோவானது தற்பொழுது வைரலாகி வருகிறது.