செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 14 பிப்ரவரி 2022 (14:17 IST)

அன்னா ஹசாரேவின் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைப்பு!

காந்தியவாதியான அன்னா ஹசாரே காங்கிரஸ் ஆட்சியின் போது நடத்திய போராட்டங்களின் மூலம் இந்தியாவில் பிரபலம் ஆனார்.

2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் தினசரி செய்திகளில் இடம்பெறும் பெயராக இருந்தவர் அன்னா ஹசாரே. காங்கிரஸ் ஆட்சியின் மீது மக்களுக்கு மிகப்பெரிய கோபம் ஏற்பட ஹசாரேவும் ஒரு காரணமாக இருந்தார். ஆனால் 2014 ல் பாஜக ஆட்சி அமைத்த பிறகு அப்படியே சைலண்ட் மோடுக்கு போனார்.

இந்நிலையில் இப்போது மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கு சமூக ஆர்வலர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் விற்பனைக்கு அனுமதி அளித்த மகாராஷ்ட்ரா அரசை எதிர்த்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.

இதனால் மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இருப்பினும் மகாராஷ்டிரா மாநிலம் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு அனுமதி அளித்ததை திரும்ப பெறுவது இல்லை என அறிவித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது. இன்று முதல் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அன்னா ஹசாரே இறங்கபோவதாக அறிவித்திருந்த நிலையில் திடீரென காலை உண்ணாவிரதப் போராட்டம் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.