வெள்ளி, 19 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 30 அக்டோபர் 2025 (17:45 IST)

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!
பீகார் சட்டசபை தேர்தலையொட்டி, கயா மாவட்டத்தில் உள்ள திதோரா கிராமத்தில் பிரச்சாரம் செய்ய சென்ற இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் எம்.எல்.ஏ.வும், திக்ரி தொகுதி வேட்பாளருமான அனில்குமார் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தினர்.
 
பல ஆண்டுகளாகத் தங்கள் பகுதியில் சாலை வசதி கோரியும், அதனை எம்.எல்.ஏ. நிறைவேற்றாததாலும் ஆத்திரமடைந்த 10 முதல் 15 பேர் கொண்ட கும்பல் மற்றும் கிராம மக்கள், அவரை செங்கற்கள் மற்றும் கற்களால் கடுமையாகத் தாக்கினர்.
 
இந்த தாக்குதலில் அனில்குமாருக்கு கை மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய சகோதரர், ஆதரவாளர்கள் மற்றும் கார் ஆகியவையும் இந்தத் தாக்குதலில் சேதமடைந்தன.
 
தாக்குதல் குறித்த காணொளி பதிவுகளின் அடிப்படையில், கற்களை வீசிய சிலரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
Edited by Mahendran