1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 24 மார்ச் 2017 (12:05 IST)

திட்டித் தீர்த்து 100க்கும் மேற்பட்ட கடிதங்கள் - பெங்களூர் சிறையில் சசிகலா அதிர்ச்சி

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவை திட்டி  ஏராளமான கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.


 

 
சசிகலா தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சசிகலா, மத்திய சிறை, பரப்பன அக்ரஹாரம், பெங்களூரு - 560100 என்ற முகவரிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கடிதங்கள் அனுப்பட்டுள்ளன என சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
அந்த கடிதங்களில் சசிகலாவை திட்டி தீர்த்தும், சபித்தும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். பெரும்பாலும், சேலம், தர்மபுரி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி, விழுப்புரம் மற்றும் சென்னை ஆகிய ஊர்களிலிருந்துதான் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது. 
 
ஜெயலலிதா உயிரிழக்க சசிகலாதான் காரணம் எனவும், வேறு எந்த காரணத்திற்காகவும் ஜெ மரணமைடயவில்லை. சசிகலா ஒரு துரோகி என்கிற ரீதியில் ஏராளமான கடிதங்கள் சென்றுள்ளனவாம். சசிகலா சிறையில் அடைக்கப்பட்ட பிப்ரவரி 15ம் தேதி முதலே கடிதங்கள் வரத் தொடங்கிவிட்டன என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
தொடக்கத்தில் அந்த கடிதங்களை சசிகலாவே படித்து வந்தார் எனவும், தற்போது இளவரசி அந்த கடிதங்களை கிழித்து விட்டு, மீதிக் கடிதங்களை மட்டுமே அவரிடம் கொடுக்கிறாராம் என்பதும் தெரியவந்துள்ளது.