செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2022 (10:38 IST)

மியான்மர் எல்லை ராணுவ சாவடிக்கு தீ: மணிப்பூர் மக்கள் கலவரம்!

2 தமிழர்கள் படுகொலையால் ஆத்திரம் மியான்மர் எல்லையில் ராணுவ சாவடிக்கு தீ வைத்து மணிப்பூர் மக்கள் கலவரம். 

 
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மோர என்ற நகரம் மியான்மர் நாட்டிற்கு எல்லைப்பகுதி அருகே அமைந்துள்ளது. இந்த நகரத்தில் பல்வேறு தமிழர்களும் வாழ்ந்து வருகிறார்கள். அப்படியாக அங்கு வாழ்ந்த ஆட்டோ ஓட்டுனரான மோகனும், அவரது நண்பர் அய்யனாரும் மியான்மர் எல்லை அருகே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
பைக்கில் வந்த இரண்டு பேர் அவர்களை சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது. ஆனால் பைக்கில் வந்தவர்கள் மியான்மர் ராணுவத்தை சேர்ந்தவர்களா, வேறு யாருமா என்பது குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. 
 
மியான்மரில் மக்களாட்சி கவிழ்ந்து ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் அதன் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மணிப்பூரில் இருந்து மியான்மர் எல்லைக்கு சென்ற கும்பல் ஒன்று அங்குள்ள ராணுவ சோதனை சாவடிக்கு தீ வைத்தது. அப்போது, தமிழர்கள் உடல்களை ஒப்படைக்காத மியான்மர் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது.