Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாஜகவுடன் கூட்டணி தொடரும்: தெலுங்கு தேசம் அறிவிப்பு!

Last Updated: சனி, 3 பிப்ரவரி 2018 (20:53 IST)
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பாரதிய ஜனதாவுடன் கூட்டணி தொடரும் என அறிவித்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இதை அவர் அறிவித்தார்.

பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு என்று எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை, மாநில அரசிடம் மத்திய அரசு விரோத போக்கு எனவே கூட்டணியிலிருந்து தெலுங்குதேச கட்சி வெளியேறும் என செய்திகள் வெளியாகின.


ஆனால், இது குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு பின்வருமாரு பேசியுள்ளார், மத்திய அரசுடன் பிரச்சினை ஏற்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. மாநில நலனே முக்கியம். பாஜக உடனான கூட்டணியை மக்கள் விரும்பாத நிலைமை வரும் போது உறவை முறித்து கொள்வது குறித்து முடிவு எடுக்கலாம்.

எனவே இப்போதைக்கு கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டாம். இந்த விவகாரத்தில் தீவிரமான ஆலோசனைக்கு பிறகே முடிவு எடுக்க முடியும் என கூறியுள்ளார். மேலும் பாஜக-வை யாரும் விமர்சனம் செய்யக் கூடாது என உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :