1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 1 ஆகஸ்ட் 2015 (03:40 IST)

இன்று முதல் ஆந்திராவிலும் ஹெல்மெட் கட்டாயமாகிறது

ஆந்திராவில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
 

 
தமிழகத்தில் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள், பின்னாள் அமர்ந்து இருப்பவர்கள் என அனைவரும் கட்டாயம் ஹெல்மெட்  அணிய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
 
இதை தமிழக அரசும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல, தேவையான அளவு விழிப்புணர்வுவை ஏற்படுத்தியது. இதனால், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள்  ஹெல்மெட்  அணிந்தே செல்கின்றனர்.
 
இந்த நிலையில், ஹைதராபாதில் தலைமைச் செயலர் ஐ.ஒய்.ஆர். கிருஷ்ணா ராவ் தலைமையில் சாலைப் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
 
அப்போது, சாலைப் பாதுகாப்பு குறித்து, மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் உச்ச நீதிமன்ற அறிவுரைகளை உடனே அமல்படுத்துமாறு போக்குவரத்துறை மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
 
இதனையடுத்து, ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஹெல்மெட்  கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.