வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 27 நவம்பர் 2015 (13:28 IST)

விமான நிலைய அதிகாரியின் கன்னத்தில் அறைந்த எம்.பி

ஆந்திர மாநில ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்பி, விமான நிலைய அதிகாரி ஒருவரின்  கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
ஆந்திர மாநிலத்தில் தற்போது மழை பொழிந்து வருகிறது. அங்கு, வெள்ள சேதங்களை பார்வையிட ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வந்தார். அவரை வழியனுப்புவதற்காக ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டை தொகுதி எம்.பி. மிதுன்ரெட்டி திருப்பதி விமான நிலையம் வந்தார்.
 
அவரை வழியனுப்பிவிட்டு, அங்கிருந்து தனது உறவினர்களுடன் டெல்லிக்கு செல்ல திட்டமிட்டிருந்தார் மிதுன்ரெட்டி. விமானம் புறப்படுவதுற்கு 45 நிமிடம் முன்பு போர்டிங் கவுண்டர்கள் மூடப்படும். இவர் சற்று தாமதமாக சென்றதால், கவுண்டர் மூடப்பட்டு டெல்லி செல்ல போர்டிங் பாஸ் கிடைக்கவில்லை.
 
இதனால், அவர் ஏர் இந்தியா நிறுவன மேலாளர் ராஜசேகர் என்பவரை சந்தித்து தனக்கும், தனது உறவினர்களுக்கும் விமான பயணத்துக்கு ஏற்பாடு செய்யும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் ராஜசேகரோ நேரம் முடிந்து விட்டது. எதுவும் செய்ய முடியாது என்று கூறவே, கோபமடைந்த எம்பி, ராஜசேகரின் கன்னத்தில் அறைந்து விட்டார்.
 
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்து பாதுகாப்பு அதிகாரிகள் தலையிட்டு, இருவரையும் சமாதானப்படுத்தினர்.
 
எனினும் இது குறித்து யாரும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கவில்லை.