செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (09:34 IST)

காவலரின் காலில் விழுந்த எம் எல் ஏ – வைரலாகும் வீடியோ!

ஆந்திராவில் கொரோனாவுக்கு எதிராகப் பணியாற்றும் காவலர் ஒருவரின் காலில் விழுந்துள்ளார் ஆளும் கட்சி எம் எல் ஏ ஒருவர்.

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காவலர்களின் பணிகள் அதிகமாகியுள்ளன. அதே நேரத்தில் மக்களைப் போலிஸார் பல இடங்களில் அடித்துத் துன்புறுத்தும் வீடியோக்களும் வெளியாகின்றன.

இந்நிலையில் ஆந்திராவில் காவலர் ஒருவரின் காலில் ஜெகன் மோகன் ரெட்டி கட்சியின் எம் எல் ஏ செட்டி பால்குனா விழுந்து வணங்கியது வைரலாகி வருகிறது. காவலர்களின் அயராத உழைப்பை கௌரவப் படுத்தும் விதமாக அவர் இவ்வாறு நடந்துகொண்டதாக சொல்லப்படுகிறது.