செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 21 நவம்பர் 2018 (20:02 IST)

தமிழக அரசை சீண்டிய ஆந்திர நடிகர்...

தெலுங்கு நடிகரும் ஆந்திர மாநில ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் இன்று சென்னையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
 
பாபாசாகேப் அம்பேத்காரின் சிந்தனைகள் எல்லாம் தென்னக மாநிலங்களுக்கு ஒரு தலைநகரம் வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக நிற்போம்.
 
அந்த விஷயத்திற்கு தென் மாநில மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
 
தமிழ்நாட்டு சூப்பர் ஸ்டார்களான ரஜினி , அல்லது கமலுடன் இணைந்து அரசியலில்  செயல்படுவேன்.
 
மேலும் வருகின்ற 2019 ஆண்டில் நான் ஆந்திராவின் சார்பில் முதல்வர் வேட்பாளாராக போட்டியிடுவேன். முதல்வராவேன்.
 
அதன் பின் தமிழக அரசு பற்றி அவர் கூறியதாவது:
 
மத்திய அரசிடம் தன் சுயமரியாதையை அடகு வைத்து விட்டு தமிழக அரசு இருக்கிறது.நம் திராவிட கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறீனார்.