வியாழன், 2 அக்டோபர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (17:38 IST)

பேரு வெச்சா.. காரு பரிசு! – ஆனந்த் மஹிந்திராவின் அசத்தல் ட்வீட்!

பேரு வெச்சா.. காரு பரிசு! – ஆனந்த் மஹிந்திராவின் அசத்தல் ட்வீட்!
அடிக்கடி வித்தியாசமான ட்வீட்டுகளை போட்டு இணையத்தில் வைரலாக வலம் வருபவர் மஹிந்திரா மோட்டார் நிறுவனத்தின் நிறுவனர் ஆனந்த் மஹிந்திரா. தற்போது ஒரு போட்டியை அறிவித்து அதற்கு பரிசாக புதிய மஹிந்திரா காரையும் பரிசாக தருவதாக கூறியிருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் நேராக பார்த்தாலும், தலைகீழாக பார்த்தாலும் ஒரே மாதிரி தெரியும் பேருந்து ஒன்றின் புகைப்படம் உள்ளது. அதைப் பதிவிட்டு இதற்கு சரியான தலைப்பு வைக்க வேண்டும். தலைப்பு ஆங்கிலம், இந்தி அல்லது இரண்டும் கலந்ததாகவும் இருக்கலாம். பொருத்தமான தலைப்பு தருபவர்களுக்கு புத்தம் புதிய மஹிந்திரா வாகனம் ஒன்று பரிசாக வழங்கப்படும் என கூறியிருக்கிறார்.

இந்த போட்டிக்கு கடைசி நேரம் நாளை காலை 10 மணி வரை என்று அவர் அறிவித்துள்ளார். இதனால் இந்த ட்விட்டர் பதிவு வேகவேகமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பலர் இந்த பதிவுக்கு தங்கள் தலைப்புகளை கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர்.

அடுத்ததாக ஆனந்த் மஹிந்திரா இதுப்போன்ற புதிய மாடல் வாகனத்தை செய்ய இருக்கிறாரோ? அதற்குதான் தலைப்பு கேட்கிறாரோ? என அவரது போட்டி நிறுவனங்கள் குழம்பி போயுள்ளன. ஒரு தலைப்புக்கு ஒரு காரே பரிசு என்கிற இந்த போட்டி சமூக வலைதளங்களில் தீயாக பரவி ஆன்ந்த மஹிந்திரா பேசு பொருளாக மாறியுள்ளார்.