வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 25 மே 2023 (07:40 IST)

மோடி தான் திறந்து வைப்பார், விரும்பும் கட்சிகள் மட்டும் பங்கேற்கலாம்: அமித்ஷா திட்டவட்டம்..!

Amitshah
புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடிதான் திறந்து வைப்பார் என்றும் விருப்பமுள்ள கட்சியின் தலைவர்கள் மட்டும் திறப்பு விழாவில் கலந்து கொள்ளலாம் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
புதிய பாராளுமன்ற கட்டிடம் வரும் 28ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் இந்த கட்டிடத்தை ஜனாதிபதி தான் திறந்து வைக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன
 
 மேலும் காங்கிரஸ் திமுக உள்ளிட்ட 19 கட்சிகளின் எம்பிக்கள் இந்த கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டோம் என விழாவை புறக்கணித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா,  பிரதமர் மோடி தான் நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைப்பார் என்றும் விருப்பம் உள்ள கட்சிகள் மட்டும் திறப்பு விழாவில் பங்கேற்கலாம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva