சாய்னா நேவால் வீட்டுக்கு அமித்ஷா சென்றது ஏன்? பரபரப்பு தகவல்

Last Modified வெள்ளி, 13 ஜூலை 2018 (22:20 IST)
மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவின் அரசு முழுமையாக நான்கு ஆண்டுகளை முடிந்துள்ள நிலையில் இந்த நான்கு ஆண்டுகளில் செய்த சாதனைகளை புத்தகமாக வடிவமைத்து முக்கிய பிரமுகர்களிடம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த புத்தகங்களை பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா, முக்கிய பிரபலங்களை நேரில் சந்தித்து கொடுத்து வருகிறார். சமீபத்தில் நடிகை வரலட்சுமியை சந்தித்து இந்த புத்தகத்தை அமித்ஷா கொடுத்தார் என்பது அனைவரும் அறிந்ததே

இந்த நிலையில் சற்றுமுன்னர் அமித்ஷா அவர்கள் பிரபல பேட்மிண்டன் வீராங்கனையும் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றவருமான சாய்னா நேவாலை அவருடைய வீட்டில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது சாய்னாவின் பெற்றோர்களும் உடனிருந்தனர். இந்த சந்திப்பின்போது பாஜக சாதனை புத்தகத்தை அமித்ஷா, சாய்னா மற்றும் அவருடைய பெற்றோர்களிடம் அளித்தார்.

இந்த சந்திப்பு குறித்து சாய்னா தனது டுவிட்டரில் கூறியபோது, 'எங்கள் வீட்டில் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக ந்டந்தது. அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. பாஜக அரசில் பல நல்ல மாற்றங்களை நான் பார்த்துள்ளேன்' என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :