சுதந்திர தினத்தன்று காஷ்மீரில் கொடியேற்றவுள்ள அமித் ஷா ! பரபரப்பு தகவல்

amith sha
Last Updated: புதன், 14 ஆகஸ்ட் 2019 (12:23 IST)
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவு மற்றும் 35 ஏ பிரிவு  ஆகியவற்றை இந்திய அரசு நீக்கியது. இதற்கு நாடு முழுவதிலும் இருந்து பரவலாக எதிர்ப்பு வலுத்து வருகிறது. 
இந்நிலையில் காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு, அங்கு ஊரடங்கு உத்தரவு இவ்வளவு நாள் இருந்த நிலையில் இன்று ஒரு சில பகுதிகளில் உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. 
 
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் சுதந்திர தினத்தன்று, காஷ்மீர் பிராந்தியத்தில் உள்ள ஸ்ரீநகரில் உள்ள லால்சவுக்  பகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசியக் கொடி ஏற்றுவார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.  


இதில் மேலும் படிக்கவும் :