திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 15 ஆகஸ்ட் 2018 (13:49 IST)

அமித்ஷா செஞ்ச வேலையை பாருங்க - அனல் பறக்கும் டிவிட்டர்

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தேசிய கொடி ஏற்றிய விவகாரம் சமூக வலைதளங்களில் ஒன்றான டிவிட்டரில் விவாத பொருளாக மாறியுள்ளது.


 
இன்று நாடு முழுவதும் சுதந்திரன தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இன்று காலை நாட்டின் பல அரசியல் தலைவர்கள், முதலமைச்சர்கள் என அனைவரும் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர். டெல்லில் பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் கொடியேற்றினார்.
 
ஆனல், அவர் ஏற்றியபோது மேலிருந்து தேசியக்கொடி, சர்ர்ரென கீழே இறங்கியது.  சுதாரித்த அமித்ஷா, மீண்டும் கொடியே மேலே ஏற்றிவிட்டார்.
 
இதையடுத்து, பாஜக ஆட்சி நடைபெற்றால் நாடு என்ன ஆகும் என்பதை தேசியக்கொடியே காட்டிவிட்டது என்கிற ரீதியில் பல கருத்துகளை தொடர்ந்து டிவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர். அதிலும் சிலர் ‘ இதே ராகுல் காந்தி கொடியேற்றும் போது இப்படி நடந்திருந்தால் பாஜவினர் எப்படி கிண்டலடித்திருப்பார்கள் என தெரியும். இப்போது, இதற்கு பாஜகவினர் என்ன கூறப்போகிறார்கள்?” என கருத்து தெரிவித்து வருகின்றனர்.