சோம்நாத் கோவிலின் அறங்காவலராக அமித் ஷா நியமனம்


K.N.Vadivel| Last Modified புதன், 13 ஜனவரி 2016 (01:09 IST)
குஜராத்தில், புகழ் பெற்ற சோம்நாத் கோவிலின் அறங்காவலராக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
 
இந்து ஆலயங்களில் குஜராத்தின் சோம்நாத் சிவன் கோவில் புகழ் பெற்றது ஆகும். இந்துக்களின் 12 புனித சிவாலயங்களில் இந்த கோவில் முக்கியமானது ஆகும்.
 
இந்தக் கோவிலின் டிரஸ்ட்டில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவர் அத்வானி, குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் ஆகியோர் உள்ளனர்.
 
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் சோம்நாத் கோவில் அறங்காவலர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், சோம்நாத் கோவில் அறங்காவலராக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நியமனம் செய்யப்பட்டார்.
 
மேலும், சோம்நாத் கோவில் அறங்காவல் குழு தலைவர் கேசுபாய் பட்டேலுக்கு மேலும் ஒரு வருடம் தலைவர் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. 


இதில் மேலும் படிக்கவும் :