1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 1 ஜூன் 2019 (14:12 IST)

’அவனோட பழக்கம் வெச்சுகிட்டா அவ்ளோதான்’ - இந்தியாவுக்கு எச்சரிக்கை விடும் அமெரிக்கா

ரஷ்யாவுடன் இந்திய அதிகளவிலான தொடர்புகள் வைத்திருப்பது அமெரிக்காவை அடிக்கடி எரிச்சல்படுத்தி வருகிறது.

ஆயுத விற்பனையில் ரஷ்யாவுக்கு இந்தியா நல்ல கஸ்டமராக இருந்து வருகிறது. இந்திய இராணுவத்துக்கு தேவையான போர்க்கப்பல்கள், இராணுவ தளவாடங்களிலிருந்து, விண்வெளிக்கு அனுப்பப்படும் சேட்டிலைட் பாகங்கள் வரை பலவற்றை இந்தியா ரஷ்யாவிடமிருந்துதான் வாங்கி வருகிறது. ’குறைந்த விலையில் நிறைந்த தரம்’ என்கிற ரஷ்யாவின் சலுகைகள் இந்தியாவிற்கு சாதகமாக உள்ளன. அதனால் தற்போது ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பத்தை ரஷ்யாவிடமிருந்து வாங்க இருக்கிறது இந்தியா. ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பம் என்பது தாக்க வரும் ஏவுகணைகளை வானத்திலேயே தாக்கி அழிக்கும் முறை. இதை கொஞ்ச நாள் முன்னால் பரிசோதித்து பார்த்து வெற்றியடைந்ததாக மோடி தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

’எஸ்400’ எனப்படும் இந்த தொழில்நுட்பத்தை ஏற்கனவே சீனாவுக்கு விற்றிருக்கிறது ரஷ்யா. சீனா, ரஷ்யா இரண்டுமே அமெரிக்காவுக்கு ஆகாதவை. இப்போது அந்த குரூப்போடு சேர்ந்து கொண்டு இந்தியாவும் அந்த தொழில்நுட்பத்தை வாங்குவது அமெரிக்காவுக்கு கடுப்பேற்ற, உடனடியாக வெள்ளை மாளிகையிலிருந்து ரிப்போர்ட் அடித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுதுறை அதிகாரி ஒருவர் கூறியது “இந்தியா-ரஷ்யாவுடனான இந்த ஒப்பந்தம் அமெரிக்க – இந்திய ராணுவ உறவில் பிரச்சினையை உண்டு செய்யும். இதனால் இந்தியா மீது தடைகள் விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது” என கூறியுள்ளார்.

இந்த ‘எஸ்400’ திட்டத்திற்காக 35 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.