செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 27 பிப்ரவரி 2021 (16:36 IST)

ஆசியாவின் டாப் பணக்காரர்களில் அம்பானி முதலிடம் !

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய நிறுவனம் ரிலையன்ஸ். இதன் தலைவராக முகேஷ் அம்பானி செயல்படுகிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுகம்செய்த ஜியோ நெட்வொர்க் சேவையை தற்போது 40 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்திவருகின்றனர்.

தொலைத்தொடர்பு மட்டுமின்றி, ரிலையன்ஸ் டிஜிட்டல் ரிலையன்ஸ் பிரஸ், ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ், மெகாமார்ட், ரிலையன்ஸ் பெட்ரோல் என பல்வேறு தொழில்துறைகளில் ஈடுப்பட்டு வெற்றிகரமாகச் செயல்பட்டுவருகிறது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா காலத்தி முகேஷ் அம்பானியில் சொத்து மதிப்பு சரிந்தது. இதையடுத்து ஆசியாவில் மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலில் முதல் இடத்தை அவர் இழந்தார். சீனாவைச் சேந்த தொழிலதிபர் ஷூங் ஷான்சம் முதலிடம் பிடித்தார்.

இந்நிலையில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். சீனாவைச் சேந்த தொழிலதிபர் ஷூங் ஷான்சம் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.