திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 3 மே 2021 (20:24 IST)

மே மாத எழுத்து தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு: மத்திய அரசு அறிவிப்பு!

மத்திய அரசு சற்று முன்பு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் மே மாதத்தில் திட்டமிட்டிருந்த அனைத்து எழுத்துப்பூர்வமான தேர்வுகளும் ஒத்திவைக்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இது சம்பந்தமான உயர்கல்வி செயலாளர் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஆன்லைன் தேர்வுகளை வந்து வழக்கம்போல் தொடரலாம் என்றும், எழுத்துப்பூர்வமான தேர்வுகள் மட்டும் ஜூன் மாதத்தில் பரிசீலிக்கப்பட்டு அதற்குப் பிறகு எந்த தேதியில் தேர்வு வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள் யாருக்காவது கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தில் தகுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் தடுப்பூசி போடும் திட்டத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது