செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 23 நவம்பர் 2021 (07:04 IST)

அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுகிறார் பிரதமர் மோடி: திமுக கலந்து கொள்ளுமா?

நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 29ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் 28ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூட்டவுள்ளார் 
 
நவம்பர் 28ஆம் தேதி பாராளுமன்ற விவகாரத்துறை சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாகவும் இந்த கூட்டத்தில் மோடி பங்கேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
அன்றைய தினம் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கூட்டப்படும் இந்த கூட்டத்தில் திமுக உள்பட தமிழக அரசியல் கட்சிகள் கலந்து கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.