வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 8 ஜனவரி 2019 (12:13 IST)

பிரசாதப் பாக்கெட்டில் சரக்கு – பாஜக நிகழ்ச்சியில் சர்ச்சை !

உத்தரப் பிரதேசத்தில்  நடந்த கோயில் விழா ஒன்றில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதப் பார்சலோடு மதுப்பாட்டில்களும் வழங்கபப்ட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்திர பிரதேசம் மாநிலத்தில் ஹர்தோய் மாவட்டத்திலுள்ள ஷ்ரவண தேவி கோயிலில் பாஸி சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்காக நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பாஜக எம்.எல்.ஏ. நிதின் அகர்வால் கலந்துகொண்டு தலைமைத் தாங்கினார். விழாவில் நிதினின் தந்தை தந்தை நரேஷ் அகர்வாலும் இருந்தார். அண்மையில்தான் சமாஜ்வாதி கட்சியிலிருந்து விலகிய இவர்தான் பாஜக வில் இணைந்து பாஸி சம்மேளனம் சார்பில் இந்தக் கோயிலில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். 

விழாவின் முடிவில் பேசிய நிதின் அகர்வால் விழாவுக்கு வந்திருப்பர்களுக்கு உணவுப் பொட்டலமங்கள் தயாராக இருப்பதாகவும் அதைப் பெற்றுக்கொண்டு செல்லுமாறும் கூறினார். மக்கள் சென்று உணவுப்பொட்டலங்களைப் பெற்று அதைத் திறந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர்.

வழங்கப்பட்ட உணவுப் பொட்டலங்களில்  பூரி, சப்ஜி, இனிப்பு உடன் மது பாட்டில் ஒன்றும் இருந்தது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறுவர்களுக்கு வழங்கப்பட்ட உணவுப் பொட்டலங்களிலும் இந்த மதுப்பாட்டில்கள் இருந்தனர். அதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ இப்போது வேகமாகப் பரவி வருகிறது. கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்ட உணவுப் பொட்டலங்களில் மதுபாட்டில் இருந்தது பக்தர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. இந்த வீடியோவால் பாஜக மீதும் பாஜக நிர்வாகிகள் மீதும் புகார்கள் எழுந்துள்ளன.

இந்த சர்ச்சையான சம்பவம் குறித்து விழாவில் கலந்துகொண்ட நரேஷ் அகர்வாலும் அவரது மகன் நிதின் அகர்வாலும் விளக்கம் அளிக்காமல் மௌனம் காத்து வருகின்றனர்.