வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 1 ஜனவரி 2017 (14:35 IST)

முற்றும் மோதல் - சமாஜ்வாடி கட்சியின் தலைவராக அகிலேஷ் யாதவ் தேர்வு

உத்திரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் சமாஜ்வாடி கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


 

 
உத்திரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் மற்றும் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம்சிங் ஆகியோர் இடையே கடந்த சில மாதங்களாகவே பனிப்போர் நிகழ்ந்து வந்தது.  
 
இந்நிலையில், அடுத்த வருடம்  நடக்கவுள்ள  உத்திரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், அகிலேஷ் யாதவ் ஆதரவு பெற்றவர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை. இந்த விவகாரம் அகிலேஷ்-முலாயம் சிங் ஆகியோருக்கிடையே மோதல் போக்கை ஏற்படுத்தியது. 
 
எனவே, அகிலேஷ் யாதவ் தனியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு இருந்தார். எனவே, ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாலும், கட்சி விரோத போக்கை கடைபிடித்ததாக கூறி அவரையும் அவரது சோகதரர் ராம்கோபால் யாதவையும் 6 வருடங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முலாயம் சிங் யாதவ் நேற்று உத்தரவிட்டார். 
 
மொத்தம் உள்ள 229 சமாஜ்வாடி எம்.எல்.ஏக்களில் 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அகிலேஷ் யாதவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து தனது பலத்தை காட்ட தனது வீட்டில் அவர் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டினார்.  இந்த கூட்டத்தில் யாரும் கலந்துகொள்ளக் கூடாது என முலாயம் சிங் எச்சரித்தும் அனைவரும் கலந்து  கொண்டனர். 
இந்த கூட்டம் முடிந்த பின் அகிலேஷ் யாதவ் தனது தந்தையை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே சமரச உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அகிலேஷ் மற்றும் ராம்கோபால் மீதான சஸ்பெண்டை நீக்கம் செய்து முலாயம் சிங்  நேற்று உத்தரவிட்டார்.
 
இந்நிலையில், தந்தை மகன் இடையேயான மோதலுக்கு கட்சியின் மூத்த தலைவரான அம்ரசிங் தான் காரணம் என அகிலேஷ் குற்றம் சாட்டினார். அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் அவர் போர்க்கொடி தூக்கினார்.
 
மேலும், கட்சியின் செயற்குழு கூட்டத்தை அவர் இன்று லக்னோவில் அவசரமாக கூட்டினார். அதில் அகிலேஷ் யாதவின் ஆதரவாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் சமாஜ் வாடியின் கட்சி தலைவராக அகிலேஷ் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அதேபோல் மாநில தலைவர் பதவியில் இருந்து சிவபால யாதவ் நீக்கப்பட்டார். அமர்சிங் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
 
தற்போது சமாஜ்வாடியின் கட்சி தலைவராக இருக்கும் அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம் சிங் இதை செல்லாது கூறியுள்ளார்.  இதனால் சமாஜ்வாடி கட்சியில் பிளவு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.