வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 11 மார்ச் 2017 (17:35 IST)

அகிலேஷ் யாதவ் தோல்வி: உத்திரப்பிரதேசத்தை கலக்கிய பாஜக

உத்திரப்பிரதேச சட்டசபை தேர்தலில் முபாரக்பூர் தொகுதியில் போட்டியிட்ட அகிலேஷ் யாதவ் தோல்வி அடைந்தார்.


 

 
உத்திரப்பிரதேச சட்டசபை தேர்தல் முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாரும் எதிர் பார்க்காத நிலையில் பாஜக அமோக வெற்றிப்பெற்றுள்ளது. சமாஜ்வாதி கட்சி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் அகிலேஷ் யாதவ் போட்டியிட்ட முபாரக்பூர் தொகுதியில் தோல்வி அடைந்தார்.
 
அகிலேஷ் யாதவ் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரை விட 2,000 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வி முகத்தில் உள்ளார். பாஜக கட்சியினர் இந்த வெற்றியை கேலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
 
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்ததே சாமாஜ்வாதி கட்சி தொல்விக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. தேர்தல் நேரத்தில் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது தந்தை முலாயம் சிங் யாதவ் ஆகியோர் இடையே சண்டை ஏற்பட்டு கட்சி இரண்டாக உடைந்தது.
 
பின் அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தார். இந்நிலையில் சமாஜ்வாதி கட்சி தோல்வி அடைந்தது.