அகிலேஷ் யாதவ் 6 ஆண்டுகள் இடைநீக்கம் - முலாயம்சிங் அதிரடி


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 30 டிசம்பர் 2016 (19:37 IST)
உத்திரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முயலாம்சிங் ஆகியோர் இடையே கடந்த சில மாதங்களாகவே பனிப்போர் நிகழ்ந்து வந்தது. இதையடுத்து அகிலேஷ் யாதவை, அவரது தந்தையும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான முயலாம்சிங் கடசியில் இருந்து 6 ஆண்டுகள் இடைநீக்கம் செய்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 


 

 
உத்திரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அகிலேஷ் யாதவ் தனியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு இருந்தார். அதைத்தொடர்ந்து சமாஜ்வாதி கட்சியின் தலைவரான, முலாயம்சிங் மற்றும் அவரது மகனும் உத்திரபிரதேச முதலமைச்சருமான அகிலேஷ் யாதவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிகழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் அகிலேஷ் யாதவை 6 ஆண்டுகள் இடைநீக்கம் செய்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாலும், கட்சி விரோத போக்கை கடைபிடித்ததாலும் 6 வருடங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முலாயம் சிங் யாதவ் அறிவித்துள்ளார்.

மேலும், அவரது சகோதரரான ராம்கோபால் யாதவையும் 6 வருடங்கள் இடைநீக்கம் செய்துள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :