1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 10 பிப்ரவரி 2022 (08:44 IST)

மீண்டும் உயர்த்தப்படும் ஏர்டெல் கட்டணம்: அதிர்ச்சியில் பயனாளிகள்

ஏர்டெல் ஜியோ உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் சமீபத்தில்தான் கட்டணத்தை உயர்த்திய நிலையில் மீண்டும் கட்டணத்தை உயர்த்த இருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏர்டெல் நிறுவனம் போஸ்ட்பெய்ட் மட்டும் பிரீபெய்டு கட்டணங்களை வெகுவாக உயர்த்திய நிலையில் இந்த ஆண்டும் தொலைதொடர்பு சேவை கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
இன்னும் நான்கு மாதங்களுக்குள் ஏர்டெல் போஸ்ட்பெய்ட் மற்றும் பிரிபெய்டு கட்டணம் உயரும் என ஏர்டெல் அறிவித்திருப்பது பயனாளிகளுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
ஏர்டெல் உயர்த்தினால் அதனைத் தொடர்ந்து மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் உயர்த்த வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது