டெல்லியில் அபாய நிலையை தொட்ட காற்றுமாசு! – பள்ளிகளுக்கு விடுமுறை!
டெல்லியில் காற்றுமாசு அபாய அளவை தொட்டுள்ள நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் ஜனவரி வரை குளிர்காலங்களில் காற்றுமாசுபாடு மிகவும் மோசமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டும் காற்று மாசுபாடு அபாய அளவை தொட்டுள்ள நிலையில் டெல்லியில் கனரக வாகனங்கள் உள்ளிட்டவற்றை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் நாளுக்கு நாள் காற்றின் தரம் மோசமாகி கொண்டே வருவதால் மக்கள் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் பள்ளிகளுக்கு இன்று முதல் நவம்பர் 10ம் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய சூழல் தவிர்த்து வெளியே செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கவும் டெல்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K