செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (15:05 IST)

இந்தியர்களை மீட்க நாளை கிளம்பும் ஏர் இந்தியா?

நாளை 2 ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
உக்ரைன் எல்லையில் ராணுவத்தை குவித்து வந்த ரஷ்யா தற்போது அதிகாரப்பூர்வமாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில், உக்ரைன் நகரங்களுக்கு ரஷ்ய ராணுவ வீரர்கள் நுழைந்துள்ளனர். இன்று இரண்டாவது நாளாக போர் நடந்து வருகிறது. 
 
உக்ரைனில், இந்தியர்களை பொறுத்தவரை சுமார் 20,000 பேர் இருக்க வாய்ப்புள்ளது. கேரளாவை சேர்ந்த மாணவர்கள் 2,800 பேரும், கர்நாடகாவை சேர்ந்த மாணவர்கள் 1,800 பேரும், தமிழகத்தை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக 1,500 லிருந்து 3,000 பேர் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. 
 
இவ்வாறு ஒவ்வொரு மாநிலமும் உக்ரைனில் இருக்கக்கூடியவர்களின் தகவல்களை ஒன்றிய அரசிடம் வழங்கி வருகிறது. இதனிடையே, உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களையும், இந்திய மாணவர்களையும் மீட்க நாளை 2 ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.