Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தாஜ்மஹால் அருகே அழகிகளின் துப்பட்டாவை பறித்த பாஜகவினர்


sivalingam| Last Modified வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (22:38 IST)
தாஜ்மஹாலுக்கு வருகை தந்த பல்வேறு நாட்டு அழகிகளின் துப்பட்டாக்களில் இந்து மத அடையாளங்கள் இருந்ததால் அந்த துப்பட்டாக்களை வலுக்கட்டாயமாக பாஜகவினர் பறித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 


உலகின் முக்கிய சுற்றுலா பகுதிகளில் ஒன்று தாஜ்மஹால். உலக அதிசயங்களில் ஒன்றான இந்த தாஜ்மஹாலை பார்க்க உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப்பயணிகள் தினமும் ஆயிரக்கணக்கில் வருவது உண்டு.

இந்த நிலையில் இன்று பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உலக அழகிகள் தாஜ்மகாலுக்கு வருகை தந்தனர். அவர்கள் தாஜ்மஹால் அருகே  புகைப்படம் எடுத்து கொண்டிருந்தபோது அப்போது அங்கு திடீரென வந்த பாஜக தொண்டர்கள் அழகிகளின் துப்பட்டாவை வலுக்கட்டாயமாக பறித்தனர்.

அவர்கள் அணிந்திருந்த துப்படாக்களில் இந்து மத அடையாளங்களான ‘ஜெய் ஸ்ரீராம்’ உள்ளிட்ட ஒருசில அடையாளங்கள் இருந்ததால் அதனை அகற்றச்சொல்லி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.


இதில் மேலும் படிக்கவும் :