திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 18 ஜூன் 2022 (11:07 IST)

போராட்டத்தை தணிக்குமா அக்னி வீரர்களுக்கான 10% ஒதுக்கீடு??

CAPF மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆட் சேர்ப்புகளில் அக்னிவீரர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 
 
இந்திய ராணுவத்தின் முப்படைகளில் 4 ஆண்டுகால குறுகிய கால ராணுவ சேவை செய்வதற்கான “அக்னிபாத் திட்டம்” மத்திய அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர இளைஞர்கள், பெண்கள் 18வயது முதல் 21 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். வழக்கமான ராணுவ உடற்தகுதி நிர்ணயங்களே அக்னிபாத் திட்டத்தில் சேர்பவர்களுக்கும் பொருந்தும். 
 
இந்த திட்டத்தின் கீழ் பணிபுரியும் வீரர்களுக்கு முதல் ஆண்டில் ரூ.4.76 லட்சம் ஆண்டு ஊதியமும், 4வது ஆண்டில் 6.92 லட்சம் ஆண்டு ஊதியமாகவும் வழங்கப்படும். 4 ஆண்டுகளை முழுவதுமாக முடிக்கும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு சேவை நிதியாக தலா ரூ.11.7 லட்சம் வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் இணைபவர்களுக்கான வயது வரம்பு 18 முதல் 23 வரை என்று கூறப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு ராணுவத்தில் இருந்த படியே பட்டப்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.  அக்னிபாத் திட்டம் தொடர்பான போராட்டங்களும் நாட்டின் அமைதியை சீர்குலைத்துள்ளன.
 
இந்நிலையில்  CAPF மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆட் சேர்ப்புகளில் அக்னிவீரர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக டிவிட்டரில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,  CAPF மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆட் சேர்ப்புகளில் அக்னிவீரர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும். மேலும், அக்னிபாத் திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அக்னி வீரர்களுக்கு உயர் வயது வரம்பை தளர்த்தவும் முடிவு செய்துள்ளது. 
ஆம், CAPF மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் பணியமர்த்தப்படுவதற்கு அக்னி வீரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச வயது வரம்பைத் தாண்டி 3 ஆண்டுகள் வயது தளர்வு கிடைக்கும். இருப்பினும், அக்னி வீரர்களின் முதல் பேச் நிர்ணயிக்கப்பட்ட உச்ச வயது வரம்பைத் தாண்டி 5 ஆண்டுகள் வயது தளர்வு இருக்கும் என தெரிகிறது. 
 
தற்போதைய நிலவரப்படி அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆயுதப் படைகள் ஆட்சேர்ப்பு அடுத்த வாரம் முதல் தொடங்கும். விரிவான அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.