1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: வெள்ளி, 1 ஜூலை 2016 (09:46 IST)

விடாது கருப்பு: மோடிக்கு தலைவலியாக இருக்கும் சுப்பிரமண்யன் சாமி

சர்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வந்த சுப்பிரமணியன் சாமியை மோடி மறைமுகமாக கண்டித்த போது தத்துவம் கூறி அவரும் மறைமுகமாக தாக்கினர். தற்போது மீண்டும் மோடியை வெளிப்படையாக தாக்கி கருத்து தெரிவித்துள்ளார்.


 


 

 
பாஜக கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கடந்த சில நாட்களாகவே சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார். முதலில் ரகுராம் ராஜை கடுமையாக தாக்கி பேசினார். பின்னர் மத்திய மந்திரி அருண் ஜெட்லியையும் கடுமையாக விமர்சித்தார்.
 
சுப்பிரமணியன் சாமியின் இத்தகைய செயலுக்கு பிரதமர் மோடி மறைமுகமாக கண்டனம் தெரிவித்தார். அதற்கு சுப்பிரமணியன் சாமி அவரது டுவிட்டர் பக்கத்தில் தத்துவம் கூறி மறைமுகமாக மோடியை சுட்டிக் காட்டி கருத்து தெரிவித்தார்.
 
அதோடு விடாமல் மீண்டும் மோடியை நேரடியாக தாக்கி டுவிட்டரில் கருத்து தெரித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
 
பத்திரிக்கையாளர் தினமும் ஏதாவது ஒரு கற்பனையை எழுதி, என்னை பேசவைக்க முயற்சிக்கின்றனர். சிய விளம்பரத்தை தேடி நான் போகவில்லை. விளம்பரம் தான் என்னை தேடி அயராது வருகிறது. அதனால்தான், தினமும் எனக்கு தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட அழைப்புகள் அதிகமாக வருகின்றன, என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும் அதில், ரகுராம் ராஜன் என்ஜினீயரிங் பட்டம் பெற்றிருக்கலாம், வர்த்தகம் படித்திருக்கலாம், அதனால் அவர் ஒன்றும் பொருளாதார நிபுணர் அல்ல, என்றும் கூறியுள்ளார்.