வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 29 ஏப்ரல் 2024 (08:28 IST)

தேவகவுடா பேரனை அடுத்து மகன் மீதும் வழக்குப்பதிவு.. பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுக்கப்பட்டதா?

தேவகவுடாவின் பேரனும், எம்பியுமான பிரஜ்வல் ரேவன்னா மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது முன்னாள் பிரதமர் தேவகவுடா மகன் ரேவன்னா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக பகீர் புகார் அளிக்கப்பட்ட நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் தேவகவுடாவின் பேரனும், எம்பியுமான பிரஜ்வல் ரேவன்னா மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் பிரஜ்வல் ரேவன்னா ஜெர்மனியில் இருப்பதாக கூறப்படுகிராது.
 
இந்நிலையில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்ணை பணிக்கு அமர்த்தியதாக ரேவன்னா மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் கைதாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
 இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் அமைச்சரும், ஜே.டி-எஸ் தலைவருமான ஹெச்.டி.ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல்   ரேவண்ணாவின் பாலியல் வீடியோக்கள் இணையத்தில் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாநில மகளிர் குழுவின் தலைவி நாகலட்சுமி சவுத்ரி முதல்வர் சித்தராமையாவுக்குக் கடிதம் எழுதிய நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோ குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva