1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 17 மே 2021 (17:18 IST)

நாட்டின் அனைத்து பள்ளிகளையும் ‘பாரத் நெட்’ மூலம் இணைக்கப்படுகிறதா?

நாட்டின் அனைத்து பள்ளிகளையும் ‘பாரத் நெட்’ மூலம் இணைக்கப்படுகிறதா?
மத்திய அரசு நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம். புதிய கல்விக் கொள்கை குறித்த திட்டங்களை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்து மக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் கூடிய கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்த ஆலோசனையில் தமிழக பள்ளி கல்வி அமைச்சர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இன்று நடைபெற்ற புதிய கல்விக் கொள்கை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளையும் பாரத் நெட் என்ற திட்டத்தின் மூலம் இணைக்க வேண்டும் என்று மாநில கல்வித் துறை செயலாளர்கள் ஆலோசனை கூறியதாகவும் இது குறித்து பரிசீலனை செய்யப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளையும் பாரத் நெட் மூலம் இணைத்தால் மாணவர்களையும் ஒருங்கிணைக்கலாம் என்று மத்திய அரசு கூறி வருகிறது