வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 28 செப்டம்பர் 2019 (12:44 IST)

காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு தாவுகிறாரா விஜயசாந்தி? – தெலுங்கானா அரசியலில் பரபரப்பு

தெலுங்கானாவில் காங்கிரஸ் முக்கிய உறுப்பினராக இருந்த நடிகை விஜயசாந்தி மீண்டும் பாஜகவி இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடிகையாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை விஜயசாந்தி. 1998ல் அரசியலில் இறங்க முடிவு செய்த விஜயசாந்தி முதன்முதலாக பாஜகவில் இணைந்தார். பிறகு சில வருடங்கள் கழித்து தனிக்கட்சி ஆரம்பித்த விஜயசாந்தி, அதை நிர்வகிக்க முடியாமல் அதை வேறொரு அரசியல் கட்சியுடன் அதை இணைத்தார். பிறகு 2014ல் காங்கிரஸில் இணைந்த விஜயசாந்தி தற்போது வரை காங்கிரஸ் கட்சியிலேயே நீடித்து வருகிறார்.

விஜயசாந்தி எந்த கட்சிக்கு மாறினாலும் தெலுங்கானாவின் பல பகுதிகளில் அவருக்கு அதிகப்படியான செல்வாக்கு உள்ளது. மக்கள் பலர் விஜயசாந்தி ஆதரவளிக்கும் கட்சிக்கு ஓட்டு போட தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே காங்கிரஸுக்கு தேசிய அளவில் செல்வாக்கு குறைந்துள்ள நிலையில் பல காங்கிரஸ் கட்சியினர் பாஜகவில் இணைந்து வருகின்றனர். தற்போது அந்த வரிசையில் விஜயசாந்தியும் பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. பாஜக தேசிய பொதுசெயளாலர் முரளிதரராவ் இதுகுறித்து விஜயசாந்தியிடம் பேசி வருவதாக அரசியல் வட்டாரத்திலிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

எனவே, விஜயசாந்தியும் அவரது ஆதரவாளர்களும் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் கூட்டி அதில் தொண்டர்களோடு பாஜகவில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.